தமிழ்    புத்தாண்டு


அனைவருக்கும்       விஜய      வருட       புத்தாண்டு        வாழ்த்துக்கள் 


கொண்டாடும்     முறை;- முதல்     நாளே    சுவாமி     முன்    ஒரு கண்ணாடியை 

வைத்து     அதன்முன்     ஒரு தட்டில்     வெற்றிலை   பழங்கள் ,  தேங்காய் , பூ 

நாணயங்கள்      ஆகியவற் றை     வைத்து   அலங்கரித்து   வைக்கவேண்டும் .

புத்தாண்டு    தினத்தன்று      காலையில்    எழுந்ததும் விளகேற்றி பிரார்த்தனை 

செய்தபின்   வேலைகளை     தொடங்கவேண்டும் .புத்தாண்டு   தினம் அன்று 

பருப்பு ,பாயசம் , வடை ,   போளி   ,  மாங்காய் &வேப்பம்பூ  ,வெல்ல்ம்   கலந்த 

பச்சடி    செய்வது     வழக்கம் .கோயிலுக்கு     சென்று வழிபடுவர்கள

மாலையில்    பஞ்சாங்கம்   (விஜய வருடம்  .)எடுத்து    அவ்வருட    பலன்களை 

படித்து    கற்பூரம்    காட்டி    வழிபட   வேண்டும் 

மாங்காய்   &   வேப்பம்   பூ   பச்சடி    எதற்காக    செய்யவேண்டும் ?அதன் 
------------------------------------------------------------------------------------------------------
விளக்கமும்      செய்முறையும் ;-  வாழ்க்கை     என்பது    இன்பம் ,  துன்பம் 
---------------------------------------
இரண்டும்    மாறி   மாறி   வரும்    இதை    நமக்கு      உணர்த்த    நம்  

முன்னோர்கள்   வருடத்தின்    தொடக்கத்திலேயே    சமையல்     மூலம் . 

 உணர்த்தி    உள்ளார்கள் .

பச்சிடி    செய்யும்     முறை;-மாங்காயை    தோல்    சீவி     பின்     நன்கு    துருவி 
---------------------------------------
தண்ணீர்     விட்டு     வேகவைக்க     வேண்டும்   .அதில்   மாங்காய்   அளவு 

வெல்லம்    போட்டு     கொதிக்க    வெய்க்கவேண்டும்   இரண்டும்    கலந்து 

சிறிது    கெட்டியாகும்    சமயம்     வேப்பம் பூ (புதிய     அல்லது     காய்ந்த )ஒரு 

ஸ்பூன் ,அரை ஸ்பூன் கடுகு ,   ஒரு காய்ந்த     மிளகாய்  ஆகியவற்றை   ஒரு 

ஸ்பூன்      எண்ணெய்      விட்டு    தாளித்து    கொட்டவேண்டும் .இந்தபச்சடியில் 

மாங்காயின் புளிப்பு ,  வெல்லத்தின் இனிப்பு ,வேப்பம் பூவின்    கசப்பு .

மிளகாயின்     காரம் ,ஆகியவை     கலந்து    ஒரு புது    சுவையுடன்    இருக்கும் 
இவ்வாறு     நம்முடைய     அன்றாட   வாழ்க்கையும்  இருந்தால்   தான் 

சுவையுடன்    ஆனந்தமாக     இருக்கும் .














-----------------------------------



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காவியத்தலைவன் (அபிஷேக் கின் முடிவு)

கல்யாண கலாட்டா