காவியத்தலைவன் (அபிஷேக் கின் முடிவு)
மணி முகூர்த்தம் முடிந்ததும் சாப்பிட்டுவிட்டு வெற்றிலை பாக்கு போட வெளியே வந்தான் அப்போது அவன் பெயர் சொல்லி யாரோ கூப்பிட்டார்கள் திரும்பிப் பார்த்தால்அவன் நண்பன் கணபதி!
என்னப்பா மணி அடுத்து உன் வீட்டு கல்யாண சாப்பாடு என்றான், ஷோபா தானேபெண்என்றான். அதற்கு ஆங்....... இல்லை யப்பா!
என்றான். உன் பையன் அந்த பெண்ணை பார்த்தாகசொன்னார்களே. பெண் நன்றாக இருப்பாளே! குடும்பமும் நல்ல வசதியான குடும்பம் ஆச்சே!
என் பையன் அபிஷேக் அந்தப்பெண்
நம்குடும்பத்திற்கு ஒத்துவராது என்கிறான். ஏண்டா என்று கேட்டால் பெண் பார்க்கும் பொழுது இருவரும் பேசிகொண்டார்கள்.. ஷோபா உங்களை எனக்கு பிடித்திருக்கிறது ஆனால் என் தாத்தா பாட்டிக்கு இருக்கும் டிரஸ் சென்ஸ்கூட உங்க வீட்டில் யாருக்கும் இல்லை என்று கூறினாளாம். இப்பொழுது இப்படி கூறும் பெண
நாளைக்கு கல்யாணம் ஆகி வீட்டிற்கு வந்தால் நான் கர்ணன் பட்ட பாடு தான் பட வேண்டி வரும் எனவே இந்த பெண் எனக்கு வேண்டாம் என்று கூறிவிட்டான் அது என்னப்பா கர்ணன் பட்டபாடு அது என்ன கதை என்று கணபதி கேட்க நானும் அதையே தான் கேட்டேன் அந்த கதையையும் சொன்னான். அது என்ன கதை என்று எனக்கும் சொல்லேன் என்று கணபதி கேட்க சேர்காலியா இருக்கிறது உட்கார்ந்து பேசுவோம் என்று கூறிக்கொண்டு சேர் இருக்கும் இடத்திற்குச் சென்றார்கள்
மணி அபிஷேக் சொன்ன கதையை சொல்ல ஆரம்பித்தான். மகாபாரதத்தில் அர்ஜுனன் துரியோதனனுக்கு நிகரானவன் கர்ணன் அவனுக்கு துரியோதனன் அங்கதேசத்தை கொடுத்துமன்னன் ஆக்கினான். அவர்கள் புகேய நாட்டு இளவரசியின் சுயம்வரத்திற்கு சென்றார்கள் அவள் பெயர் உருபி. அவள் கர்ணணை விரும்பி மாலையிட்டாள். ஆனால் அவள் அனைவரையும் கேள்விகள் கேட்டு துன்பம் தருவாள். திரௌபதி துகிலுரிதல் சம்பவத்தின்போது உருபி கர்ப்பமாக இருந்தாள்., இந்த துகிலுதறிதல்நிகழ்ச்சிக்கு தூண்டியது கர்ணன் என்று ஆவேசம் கொண்டாள் இதற்கு காரணம் கர்ணன் கீழ்ஜாதி பிறப்பு என்றாள். இதனால்கர்ணன்மேல் கோபம் கொண்டு தன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டாள் குழந்தை பிறந்ததும் அனைவரும் அவளுக்கு புத்தி சொல்லி அவளை கர்ணனிடம் அனுப்பிவைத்தார்கள். கர்ணன் தேரோட்டியின் மகன் என்பது இவ்வாறுபலமுறை அவனை அவன் பிறப்பைப் பற்றி இழிவாக கூறுவாள். இதுபோன்றுதான் ஷோபாவும் நம்முடைய தகுதியை பற்றி கூற மாட்டாள் என்பது என்ன உறுதி? எனவே நம் தகுதிக்கு தகுந்த மாதிரி பெண் பாருங்கள் என்று கூறிவிட்டான் எனக்கும் அதுதான் சரி என்று பட்டது நான் அவர்களிடம் எங்களுக்கு சகுனம் சரியில்லை என்று கூறிவிட்டேன் என்று மணி கூறினார். இதைக் கேட்ட கணபதி நான் இது மாதிரி ஒரு கதையை கேட்டதில்லையே என்று கூற மணியும் இதையேதான் நானும் அவனிடம் கேட்டேன் அதற்குஅவன்
கவிதா கானே எழுதிய Karans wife
என்ற புத்தகத்தை படித்துப் பாருங்கள் அப்போது உங்களுக்கே புரியும் என்று கூறினான்
இதைகேட்ட கணபதி மகாபாரதத்தில் காவியத் தலைவனான கர்ணன் வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு சம்பவத்தை உன் மூலம் தெரிந்து கொண்டேன் இது எனக்கும் ஒரு பாடம் நம்மை விட நம் பிள்ளைகள் நிறைய படித்தவர்கள் .நிறைய தெரிந்து கொண்டு வாழ்க்கையில் யோசித்து முடிவெடுக்கிறார்கள் என்றார் உன்னுடன் பேசியதால் ஒரு நல்ல கருத்தைதெரிந்துகொண்டேன்… சரிப்பா பார்த்துபெண் எடு "கல்யாணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் "என்று கூறிவிட்டு தன் ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு கிளம்பினார் கணபதி!!! பச்ச
கருத்துகள்
கருத்துரையிடுக