கல்யாண கலாட்டா

என்ன அக்கா வீட்டில் என்ன விசேஷம் என்றாலும் நானும் என் கணவரும் தான் இன்சார்ஜ். என் அக்கா பெண்ணிற்கு திருமணத்தில் நான்தான் எல்லா விஷயங்களையும் கவனித்து வந்தேன். மாப்பிள்ளை வீட்டார் பக்கா தஞ் அல்லசாவூர் என்னை கண்ணில் விரலைவிட்டு ஆட்டி எடுத்தார் கள். என் அக்காவிடம் ஏதாவது கேட்டால்என் தங்கையிடம் கேளுங்கள் என்று சொல்லி தப்பித்துவிடுவார்கள்.
முதல் நாள் எப்படியோ எல்லாவற்றிலும் தப்பிவிட்டேன்
கல்யாணத்தன்று காலையில் ஊஞ்சல் நடைபெற்றது அப்போது சமையல்காரர் பச்சை பிடிஎன்று திருஷ்டி கழிய சிகப்பு மஞ்சள் எனகலர்கலரான சாதஉருண்டைகளை ஒரு தாம்பாளம் நிறைய கொண்டு வைத்து விட்டு சென்றார்.. சம்பந்தி மாமி என்னிடம் கூப்பிட்டு இதுஎப்படி போறும்.? எங்க மனுஷா நிறைய பேர் இருக்கா எனவே இன்னொரு தாம்பாளம் நிறைய கொண்டுவரச் சொல்லுங்கள் என்றார் நான் சமையல் கட்டுக்கு போய் சமையல்காரர் இடம் இன்னொரு தாம்பாளம் நிறைய வேண்டுமாம் எனவே கொண்டுவாருங்கள் என்றேன். உடனே அவர் ஐயோ மாமி சாதமே இல்லையே எப்படி உருண்டு பிடிக்கிறது என்றார். என் கூட வந்த என் ஒன்றுவிட்ட அக்கா இப்ப என்னடி பண்றது? அந்த மாமி ஒரு வழி பண்ணிடுவாளே......... என்றார்

ஒரே குழப்பமாக இருந்தது திடீரென்று எனக்கு ஒரு யோசனை தோன்றியது சமையல்காரைபார்த்து என்ன மாமா இட்லி இருக்கா? உதிர்ந்த இட்லி இருந்தாலும பரவாயில்லை உடனே அதுல மஞ்சள்பொடி கலந்து கொஞ்சமும் சுண்ணாம்புக்கலந்து கொஞ்சமும் கெட்டியாகஉருண்டை பிடிங்கோ இட்லின் னு தெரிய கூடாது என்று கூறினேன் அவரும் அதேமாதிரி செஞ்சார். நானும் என் அக்காவும் பயந்து கொண்டே இருந்தோம். கல்யாண சந்தடியில் யாரும் அதை கவனிக்கவில்லை ஒருவழியாக ஊஞ்சலும் முடிந்தது உடனே கிளீன் பண்ண உடனே கூப்பிட்டு அவசரஅவசரமாக எடுத்துவிட செய்தேன் நான் செய்த இந்த வேலை யாருக்கும் தெரியாது ஆனால் அதுக்கு பின்னால உனக்கு எப்படி இந்த ஐடியா தோணிது என்று என்அதக்காகூறினாள்இதைஎல்லாருக்கும் சொல்லி சிரித்தாள் இன்றும் எங்கள் வீட்டில் கல்யாணம் என்றால் அந்த நிகழ்ச்சியை சொல்லி சிரிப்போம்..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காவியத்தலைவன் (அபிஷேக் கின் முடிவு)