இடுகைகள்

ஜூலை, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காவியத்தலைவன் (அபிஷேக் கின் முடிவு)

மணி முகூர்த்தம் முடிந்ததும் சாப்பிட்டுவிட்டு வெற்றிலை பாக்கு போட வெளியே வந்தான் அப்போது அவன் பெயர் சொல்லி யாரோ கூப்பிட்டார்கள் திரும்பிப் பார்த்தால்அவன் நண்பன் கணபதி! என்னப்பா மணி அடுத்து உன் வீட்டு கல்யாண சாப்பாடு என்றான், ஷோபா தானேபெண்என்றான். அதற்கு ஆங்....... இல்லை யப்பா! என்றான். உன் பையன் அந்த பெண்ணை பார்த்தாகசொன்னார்களே. பெண் நன்றாக இருப்பாளே! குடும்பமும் நல்ல வசதியான குடும்பம் ஆச்சே! என் பையன் அபிஷேக் அந்தப்பெண் நம்குடும்பத்திற்கு ஒத்துவராது என்கிறான். ஏண்டா என்று கேட்டால் பெண் பார்க்கும் பொழுது இருவரும் பேசிகொண்டார்கள்.. ஷோபா உங்களை எனக்கு பிடித்திருக்கிறது ஆனால் என் தாத்தா பாட்டிக்கு இருக்கும் டிரஸ் சென்ஸ்கூட உங்க வீட்டில் யாருக்கும் இல்லை என்று கூறினாளாம். இப்பொழுது இப்படி கூறும் பெண  நாளைக்கு கல்யாணம் ஆகி வீட்டிற்கு வந்தால் நான் கர்ணன் பட்ட பாடு தான் பட வேண்டி வரும் எனவே இந்த பெண் எனக்கு வேண்டாம்  என்று கூறிவிட்டான் அது என்னப்பா கர்ணன் பட்டபாடு அது என்ன கதை என்று கணபதி கேட்க நானும் அதையே தான் கேட்டேன் அந்த கதையையும் சொன்னான். அது என்ன கதை என்று எனக்கும் சொல்லேன் என...

தனித்திறமைகள் 2020

எனக்கு கை வேலகளில் அதிக நாட்டம் உண்டு எதைப் பார்த்தாலும் உடனே அதை எப்படியாவது கற்றுக்கண்டு செய்து விடுவேன் இப்பொழுதெல்லாம் விதவிதமானமணிகளைக் கொண்டு மாலைகள் செய்வது ஃபேஷன் எனவே அதைக் கற்றுக்கண்டு மாலைகள் செய்தேன அதை எங்கள் லேடிஸ் கிளப் பங்ஷனில் விற்று அந்த பணத்தை ஏழைக் குழந்தைகளின் கல்விச் செலவிற்கு கொடுத்தேன் மேலும் வெளிநாடுகளுக்கு செல்லும் பொழுது அங்குள்ளவர்களுக்கு பழம் ஸ்வீட் என்று வாங்கி போகாமல் நானே செய்த மணிகளை பிரசன்ட் செய்வேன் அது அவர்களுக்கு மிகவும் பிடிக்கும் அப்படி செய்த சில மணியின் டிசைனை போட்டோ எடுத்து இணைத்துள்ளேன்

கல்யாண கலாட்டா

என்ன அக்கா வீட்டில் என்ன விசேஷம் என்றாலும் நானும் என் கணவரும் தான் இன்சார்ஜ். என் அக்கா பெண்ணிற்கு திருமணத்தில் நான்தான் எல்லா விஷயங்களையும் கவனித்து வந்தேன். மாப்பிள்ளை வீட்டார் பக்கா தஞ் அல்லசாவூர் என்னை கண்ணில் விரலைவிட்டு ஆட்டி எடுத்தார் கள். என் அக்காவிடம் ஏதாவது கேட்டால்என் தங்கையிடம் கேளுங்கள் என்று சொல்லி தப்பித்துவிடுவார்கள். முதல் நாள் எப்படியோ எல்லாவற்றிலும் தப்பிவிட்டேன் கல்யாணத்தன்று காலையில் ஊஞ்சல் நடைபெற்றது அப்போது சமையல்காரர் பச்சை பிடிஎன்று திருஷ்டி கழிய சிகப்பு மஞ்சள் எனகலர்கலரான சாதஉருண்டைகளை ஒரு தாம்பாளம் நிறைய கொண்டு வைத்து விட்டு சென்றார்.. சம்பந்தி மாமி என்னிடம் கூப்பிட்டு இதுஎப்படி போறும்.? எங்க மனுஷா நிறைய பேர் இருக்கா எனவே இன்னொரு தாம்பாளம் நிறைய கொண்டுவரச் சொல்லுங்கள் என்றார் நான் சமையல் கட்டுக்கு போய் சமையல்காரர் இடம் இன்னொரு தாம்பாளம் நிறைய வேண்டுமாம் எனவே கொண்டுவாருங்கள் என்றேன். உடனே அவர் ஐயோ மாமி சாதமே இல்லையே எப்படி உருண்டு பிடிக்கிறது என்றார். என் கூட வந்த என் ஒன்றுவிட்ட அக்கா இப்ப என்னடி பண்றது? அந்த மாமி ஒரு வழி பண்ணிடுவாளே......... என்றார் ஒரே குழப...