கணவன் மனைவி உறவு
கணவன் மனைவியை எப்படி இருக்கவேண்டுமெனறு ஷங்கர் ராஜரத்தினம் கேட்டிருந்தார் அதற்கு என்னால் முடிந்த அதாவது நாங்கள் வாழ்ந்த காலத்தை பற்றி கூறுகிறேன் இதில் உங்களுக்கு தேவையானதை எடுத்துக்கொள்ளலாம் அதனால் நல்லதேநடக்கும் என்று நினையுங்கள் அதை செயல்படுத்த முடிவு செய்யுங்கள் உங்கள் வாழ்க்கை
சந்தோஷமாக அமையும்
திருமணம் என்பது இருவரின் வாழ்க்கை ஒப்பந்தம் அதாவது இருவரும் சந்தோசமாக வாழ வேண்டுமெனறு செய்து கொள்கிறோம் அது காதல் திருமணமாக இருந்தாலும் பெரியோர்கள் நிச்சயம செய்தாலும் ஒன்றுதான்.
காதலிக்கும் போது இருப்பது போன்று திருமணத்திற்குப் பின் இருக்க முடியாது என்பது முதலில் புரிந்து கொள்ள வேண்டும் அப்போதுதான் வாழ்க்கை இன்பமாக அமையும்
பெரியோர்கள் நிச்சயம் செய்தால் திருமணத்திற்குப் பின் ஒருவரை ஒருவர் காதலிக்க வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும்
1 திருமணமானதும் இரு குடும்பமும் ஒன்று என்ற எண்ணம் இருவருக்கும் வரவேண்டும் அதற்காக ஒருவரை ஒருவர் குறை சொல்லக்கூடாது
2 திருமணத்தின்போது யாராவது குறை சொல்லாமல் இருக்கமாட்டார்கள் அதை கணவனும் மனைவியும் பெரிதுபடுத்தாமல் நமக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் நடந்து கொள்ள வேண்டும் அதைப்பற்றி அனாவசியமாக பேசி நம் வாழ்க்கையை வீணடிக்க கூடாது 3 கணவன்-மனைவிக்குள் சிறுசிறு சச்சரவுகள் வரலாம் ஆனால் அது படுக்கை அறைக்குள் வர கணவனோ மனைவியோ இடம் கொடுக்கக் கூடாது
4 குழந்தைகள் எதிரே கணவன் மனைவி இரு வீட்டாரை பற்றியும் குறையாக பேசி சண்டை போடக்கூடாது அது குழந்தைகளை பாதிக்கும்
5 இரவில் அனைவரும் மாமியார் மாமனார் குழந்தைகள் ஒருங்கே உட்கார்ந்து சாப்பிட வேண்டும் அப்போது சந்தோசமாக
.பேசினாள் எந்த பிரச்சனையையும
சுமுகமாக முடியும். வளரும் குழந்தைகளுக்கு இது ஒரு நல்ல பாடம் என்பது போகப்போக உங்களுக்கே தெரியும்
6கணவனுக்கு கிரிக்கெட் பிடிக்கும் மனைவிக்கு சீரியல் பிடிக்கும் என்றால் அவரவர்களுக்கு பிடித்ததை பார்க்க விட்டுக்கொடுக்க வேண்டும் அதைப்பற்றி பேசி மனதைக் கெடுத்துக்கொள்ளக்கூடாது.
7கணவனுக்கு தெரியாமல் மனைவியும் மனைவிக்குத் தெரியாமல் கணவனோ எந்த ரகசியமும் வைத்துக்கொள்ளக்கடாது
8இருவரும் வேலைக்குச் செல்பவர்கள் என்றால் தங்கள் வேலையில் தான் உயர்ந்தவர்நீ தாழ்ந்தவர்என்றும் ஒருவருக்கொருவர் சொல்லி தகராறு செய்து கொள்ளக்கூடாது
9கணவனும் மனைவியும் தினமும் சிறிது நேரமாவது ஒருவருடன் ஒருவர் சிரித்துப் பேசி மகிழ வேண்டும்.
100இருவீட்டாரின் நிகழ்ச்சிகளுக்கு இருவரும் கூடியவரை சேர்ந்தே போக வேண்டும் தவிர்க்க முடியாத காரணம் இருந்தால்மட்டும்!
11வீட்டின் வரவு செலவு கணக்குகளை இருவரும் சேர்ந்து பேசி முடிவு எடுக்க வேண்டும்
நானும் என் கணவரும் மேற்கண்ட கொள்கைகளை கடைப்பிடித்ததால் 52 வருடங்கள் மிக சந்தோஷமாக வாழ்ந்தோம், எங்களைப் பார்த்து அனைவரும் ஆச்சரியப்படுவார்கள். என் பேரன்பேத்திகள் தாத்தாவும் பாட்டியும் ஹாப்பியா பேசிண்டு இருகாஎன்று கூறி கேலி செய்வார்கள்.,
நமக்குக் கிடைத்திருக்கும் வாழ்க்கையை சந்தோஷமாக வைத்துக் கொள்வது நம் கையில் தான் உள்ளது பிறரைப் பார்த்து புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட
என்பது போல் செய்துகொள்ளக்கூடாது
வேலை செய்யும் இடத்தில் நம் மேலதிகாரி சொல்வதை வாயை திறக்காமல் செய்கிறோம் ஏன் வீட்டில் செய்யக்கூடாது என்று நினைத்தால் வாழ்வு மிக இன்பமாக அமையும் என்பது என் கருத்து .இது பிடித்திருந்தால் நீங்களும் என்னைப்போல் செஞ்சுரி அடிக்கலாம்,.!!!!!!!!!!!
கருத்துகள்
கருத்துரையிடுக